
வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 1 ~~~~~~~~~~~~~~~~~~~~~~ நஜ்த் தேசத்தில் இருந்து வந்திருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் காணவேண்டும் என நபித் தோழர்களிடம் வேண்டிநின்றார் அவரை அழைத்துக்கொண்டு மஸ்ஜித் நபவீக்குள் இருந்த பெருமானார்(ஸல்) அவர்களின் முன் கொண்டு நிறுத்தினர் யார் இவர்? என நபி (ஸல்) அவர்கள் வினவ, வந்தவர் நான் அதீ இப்னு ஹாத்திம் என்றார் ஒரு முறை நஜ்த் பகுதியில் இருந்து கைதியாக பிடிக்கப்பட்டு வந்தவர்களில் இவரின் சகோதரி ஸஃபானாவும் ஒருவர் நபிகளாரிடம் விடுதலை வேண்டி நின்ற அப்பெண்மணியிடம்நபிக்ளார் முகவரி கேட்டபோது அதீ இப்னு ஹாத்திமின் சகோதரி என பதிலளித்தார். அப்போது நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வ்வைவிட்டும், அல்லாஹ்வின் துதரை விட்டும் விரண்டோடியவன் தானே உனது சகோதரன்?எனக் கூறினார்கள் அந்த அதீ இப்னு ஹாத்திம் தான் இப்போது நபி(ஸல்) அவர்களைத் தேடி வந்திருந்தார் நபிகளார் அவர்களை தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் வழியில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியொருவர் நபிகளாரை அழைத்தார்கள் நபி(ஸல்)அவர்கள்அந்தபெண்மணி அருகே நின்றார்கள் மிகநீண்டநேரம் அப்பெண்மணி தமது தேவை குறித்து பேசிகொண்டிருந்தார...