வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 1
~~~~~~~~~~~~~~~~~~~~~~


நஜ்த் தேசத்தில் இருந்து வந்திருந்த
ஒருவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் காணவேண்டும் என நபித் தோழர்களிடம் வேண்டிநின்றார் அவரை அழைத்துக்கொண்டு மஸ்ஜித் நபவீக்குள் இருந்த பெருமானார்(ஸல்) அவர்களின் முன் கொண்டு நிறுத்தினர் யார் இவர்? என நபி (ஸல்) அவர்கள் வினவ, வந்தவர் நான் அதீ இப்னு ஹாத்திம் என்றார்
ஒரு முறை நஜ்த் பகுதியில் இருந்து கைதியாக பிடிக்கப்பட்டு வந்தவர்களில் இவரின் சகோதரி ஸஃபானாவும் ஒருவர் நபிகளாரிடம் விடுதலை வேண்டி நின்ற அப்பெண்மணியிடம்நபிக்ளார் முகவரி கேட்டபோது அதீ இப்னு ஹாத்திமின் சகோதரி என பதிலளித்தார். அப்போது நபி(ஸல்)அவர்கள்
அல்லாஹ்வ்வைவிட்டும், அல்லாஹ்வின் துதரை விட்டும் விரண்டோடியவன் தானே உனது சகோதரன்?எனக் கூறினார்கள் அந்த அதீ இப்னு ஹாத்திம் தான் இப்போது நபி(ஸல்) அவர்களைத் தேடி வந்திருந்தார்
நபிகளார் அவர்களை தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் வழியில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியொருவர் நபிகளாரை அழைத்தார்கள் நபி(ஸல்)அவர்கள்அந்தபெண்மணி அருகே நின்றார்கள் மிகநீண்டநேரம் அப்பெண்மணி தமது தேவை குறித்து பேசிகொண்டிருந்தார்கள் பெருமானார்(ஸல்) அவர்கள் கால்கடுக்க, முகம் சுழிக்காமல், பேசி முடிக்கும் வரை நின்று கொண்டே இருந்தார்கள்.
அதீ இப்னு ஹாத்தீம் சொல்கிறார்:
நான் என் மனதினுள் “நிச்சயமாக இவர் ஓர் அரசராக இருக்க வாய்ப்பில்லை எனக் கூறிக்கொண்டேன்”
பின்பு நபி (ஸல்) அவர்கள் என்னை அவர்களின் வீட்டிற்குள் அழைத்துச்சென்று மெல்லிய தலையணையில் என்னை அமருமாறு கூறினார்கள்.நான் நீங்கள் அமருங்களேன்” என்றான்.நீயே அமர்ந்துகொள் நானும் தலையணை மீது அமர்ந்துகொண்டேன்.
நிச்சயம் இதுபோன்ற எந்த ஒரு காரியத்தையும் அரசர்களால் செய்ய முடியாது என நான் என மனதினுள் கூறிக்கொண்டேன்.பின்பு என்னிடம் நபி (ஸல்) அவர்கள் நீ ரகூஸி தானே?(ரகூஸி என்றால் கிறிஸ்தவத்தையும், நட்சத்திரத்தை வணங்குவதையும் கூட்டாக செய்து வந்த சமூகம்) என்று கேட்டார்கள்.
ஆம் என்றேன், பின்பு நபிகளார் அதிய்யே! இந்த மக்களின் (முஸ்லிம்களின்) வறுமைதான் இந்த மார்க்கத்தில் உன்னை இணைப்பதற்கு தடையாக உள்ளதா?
ஒரு காலம் வரும்! இவர்களின் கரங்களில் செல்வம் கொழிக்கும்! ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள் அல்லது, இந்த மார்க்கத்தை ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவானதாகவும், எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த மார்க்கத்தில் இணைவதற்கு தடையாக உள்ளத?
ஒரு காலம் வரும்! ஒரு பெண் தன்னந்தனியே காதிஸிய்யாவிலிருந்து தன்னுடைய வாகனதில் புறப்பட்டு வந்து எவருடைய பயமும் இன்றி கஃபாவை வலம் வருவாள்.அல்லது, ஆட்சி அதிகாரம் முஸ்லிமல்லாதவர்களின் கரங்களில் இருப்பது தான் இந்த மார்க்கத்தில் இணைவதற்கு தடையாக உள்ளதா?
ஒரு காலம் வரும்! பாபிலின் வெள்ளை மாளிகையும், கோட்டை கொத்தளமும் வெற்றிக் கொள்ளப்படுவதை நீ காது குளிர கேள்விப்படுவாய்! என நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
உன்மையில் அவர் (முஹம்மத் (ஸல்)) நபி என்பதையும், அல்லாஹ்வின் துதர் தான் என்பதை நான் விளங்கிக்கொண்டேன். பின்பு நான் நபி (ஸல்) அவர்களின் கரம் பிடித்து தீனுல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் என அதீஇப்னு ஹாதிம் (ரலி) கூறினார்கள்.
மேலும், என் வாழ்நாளில் நபிகளார் முன்னறிவிப்புச் செய்தவைகளில் மூன்றில் இரண்டை நான் பார்த்து விட்டேன்.
பாபில் வெற்றி கொள்ளப்பட்டதும் ஒரு பெண் தனியே கஃபாவை வலம் வந்ததும், முஸ்லிம்களின் செல்வம் கொழிப்பதை நான் பார்க்கவில்லை.நீங்கள் பார்ப்பீர்கள் என்று அதீ இப்னுஹாதிம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: தஹ்தீப் - சீரத் இப்னு ஹிஷாம் பக்கம்: 272-274

Comments

Popular posts from this blog